16வது தாமிரபரணி பகுதி நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பில் தெற்கு தமிழ்நாட்டில் 21,000க்கும் மேற்பட்ட நீர்ப்பறவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 68 நீர்ப்பாசன குளங்களில் 69 இனங்களைச் சேர்ந்த மொத்தம் 21,091 நீர்ப்பறவைகள் கணக்கிடப் பட்டன.
மத்திய ஆசிய பறக்கும் பாதையிலிருந்து வரும் இனங்கள் உட்பட, மொத்த எண்ணிக்கையில் சுமார் 36% இடம்பெயர்வுப் பறவைகள் ஆகும்.
தூத்துக்குடி மாவட்டம் மிக அதிகமான பறவைகள் எண்ணிக்கையும் இனப் பன்முகத் தன்மையையும் பதிவு செய்துள்ளது.