TNPSC Thervupettagam

நீர்வாழ் உயிரி வளர்ப்பு காப்பீட்டு முன்னெடுப்பு

October 3 , 2026 4 days 63 0
  • பிரதம மந்திரி மத்ஸ்ய கிசான் சம்ரிதி சாஹ்-யோஜனா (PM-MKSSY) திட்டத்தின் கீழ் 40% பிரீமியம் ஊக்கத்தொகையுடன் நீர்வாழ் உயிரி வளர்ப்பு காப்பீட்டை அரசு ஊக்குவித்து வருகிறது.
  • 2024-25 ஆம் ஆண்டில் இந்தியா 19.8 மில்லியன் டன் என்ற இதுவரை இல்லாத அளவிலான மீன் உற்பத்தியைப் பதிவு செய்துள்ளது. இது உலகளாவிய உற்பத்தியில் சுமார் 8% ஆகும், இதன் மூலம் உலகின் இரண்டாவது பெரிய மீன் உற்பத்தி நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
  • இந்தியாவின் மொத்த மீன் உற்பத்தியில் 74% க்கும் அதிகமான பங்கை நீர்வாழ் உயிரி வளர்ப்பு அளிக்கிறது என்ற நிலையில் இதில் கெண்டை மீன், இறால், கூண்டு மற்றும் கடல்சார் பண்ணை வளர்ப்பு ஆகியவை அடங்கும்.
  • இந்தியாவில் சுமார் 14.1 லட்சம் ஹெக்டேர் உவர் நீர் பரப்பளவு உள்ளது, ஆனால் அதில் சுமார் 17% மட்டுமே நீர்வாழ் உயிரி வளர்ப்பிற்காக மேம்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் சுமார் 1.95 லட்சம் கிலோமீட்டர் ஆறுகள் மற்றும் கால்வாய்களும், 31.5 லட்சம் ஹெக்டேர் நீர்த்தேக்கங்களும், 22.1 லட்சம் ஹெக்டேர் குளங்கள் மற்றும் தொட்டிகளும் உள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்