தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகியவை இணைந்து கேரளாவில் உள்ள 89 கணக்கெடுப்பு தொகுதிகளிலும், தமிழ்நாட்டில் உள்ள 176 கணக்கெடுப்பு தொகுதிகளிலும் நீலகிரி வரையாடுகளின் கணக்கெடுப்பை மேற்கொள்ள உள்ளது.
எரவிகுளம் தேசியப் பூங்கா நிறுவப்பட்டதன் 50வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் இந்த ஒருங்கிணைந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் நீலகிரி வரையாடு இனம் ஆனது, மிக முதன்மையாக தென்னிந்தியாவின் மலைப்பகுதிகளில் காணப்படுகிறது.
எரவிகுளம் தேசியப் பூங்காவில் இந்த இனம் மிகவும் அதிக எண்ணிக்கையில் காணப் படுவதோடு மூணாறு பகுதிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இப்பகுதியை ஒரு முக்கியச் சுற்றுலாத் தலமாக இது மாற்றுகிறது.