TNPSC Thervupettagam

நீலகிரி வரையாடுகளின் தகவல் பரப்பு மையம்

December 2 , 2025 3 days 102 0
  • கோவையில் செம்மொழிப் பூங்காவிற்கு அருகில் காந்திபுரத்தில் ஒரு நீலகிரி வரையாடு தகவல் பரப்பு மையம் நிறுவப்படும்.
  • கடந்த ஆண்டு, தமிழ்நாடு மாநிலத்தில் 13 வழித் தடங்கள் மற்றும் 140 இடங்களில் நடத்தப் பட்ட கணக்கெடுப்பின் போது 1,031 நீலகிரி வரையாடுகள் பதிவு செய்யப் பட்டன.
  • இந்த ஆண்டு, 14 வாழ்விடங்கள் மற்றும் 175 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில், 1,303 நீலகிரி வரையாடுகள் பதிவு செய்யப்பட்டன என்ற நிலையில்  இது 272 என்ற அதிகரிப்பைக் காட்டுகிறது.
  • ஆனைமலை புல் மலைகளில் தமிழ்நாட்டிலேயே மிகவும் அதிகபட்சமாக 334 நீலகிரி வரையாடுகள் பதிவாகியுள்ளன.
  • கேரளாவில் 1,352 நீலகிரி வரையாடுகளும் பதிவாகியுள்ளது என்பதோடு இது தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கான ஒருங்கிணைந்த மொத்த எண்ணிக்கையை 2,655 ஆக உயர்த்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்