சென்னையில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி சபை - மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு நிறுவனம் (ICAR-CIBA) ஆகியன அமைப்புகள் இணைந்து இந்தியாவின் முதல் நீல நீச்சல் நண்டு வளர்ப்புத் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக செயல்விளக்கம் செய்து காட்டியது.
நீல நீச்சல் நண்டானது அறிவியல் பூர்வமாக 'போர்டுனஸ் ரெட்டிகுலட்டஸ்' என அழைக்கப் படுவதுடன் இது உவர்நீர் மீன்வளர்ப்பில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான வணிக ரீதியான கடல் நண்டு இனமாகும்.
ICAR-CIBA நிறுவனமானது, இளம் நண்டு பொரிப்பகம், நாற்றங்கால் வளர்ப்பு, வளர்ப்பகப் பண்ணை நடைமுறைகள் மற்றும் சிறப்பாக உருவாக்கப்பட்ட BSCrabPlus எனப்படும் குருணைத் தீவனம் உள்ளிட்ட முழுமையான தொழில்நுட்பத் தொகுப்பை உருவாக்கியுள்ளது.
இந்த செயல்விளக்கமானது, இந்நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்ட பொரிப்பக இளம் நண்டுகள் மற்றும் BSCrabPlus தீவனத்தைப் பயன்படுத்தி, சென்னையில் உள்ள முட்டுக்காடு பரிசோதனை நிலையத்தில் நடத்தப்பட்டது.
வணிக ரீதியான நண்டு வளர்ப்பை மேம்படுத்துதல், விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்தல் மற்றும் இந்தியாவில் நிலையான உவர்நீர் மீன்வளர்ப்பை ஆதரித்தல் ஆகியவற்றை இத்தொழில்நுட்பம் நோக்கமாகக் கொண்டுள்ளது.