சர்வதேசப் பெரும் பூனைகள் கூட்டமைப்பு – வங்காள தேசம்
June 29 , 2026 8 days 103 0
சர்வதேசப் பெரும் பூனைகள் கூட்டமைப்பின் (IBCA) 27-வது உறுப்பு நாடாக வங்காள தேசம் இணைந்துள்ளது.
சர்வதேசப் பெரும்பூனைகள் கூட்டமைப்பு (IBCA) என்பது ஏழு பெரும்பூனை இனங்களைப் பாதுகாப்பதற்காக இந்தியாவின் புது தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஓர் ஒப்பந்த அடிப்படையிலான அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும்.
புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் 50வது ஆண்டு விழாவின் போது, 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் இக்கூட்டமைப்பு தொடங்கப்பட்டது என்பதோடு மேலும் இது 2025 ஆம் ஆண்டு ஜனவரி 23 அன்று ஓர் ஒப்பந்த அடிப்படையிலான அமைப்பாக மாறியது.
புலி, சிங்கம், சிறுத்தை, பனிச்சிறுத்தை, சிறுத்தைப்புலி, ஜாகுவார் மற்றும் பூமா ஆகிய ஏழு பெரும்பூனை இனங்கள் இக்கூட்டமைப்பின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்தியா மற்றும் வங்காள தேசம் பகிர்ந்துகொள்ளும் சுந்தரவனக் காடுகளில் உள்ள வங்காளப் புலிகளின் பாதுகாப்பு உட்பட, பெரும்பூனைகள் பாதுகாப்பில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக இக்கூட்டமைப்பில் வங்காள தேசம் இணைந்து உள்ளது.