TNPSC Thervupettagam

நீல நீச்சல் நண்டு வளர்ப்புத் தொழில்நுட்பம்

June 28 , 2026 9 days 108 0
  • சென்னையில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி சபை - மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு நிறுவனம் (ICAR-CIBA) ஆகியன அமைப்புகள் இணைந்து இந்தியாவின் முதல் நீல நீச்சல் நண்டு வளர்ப்புத் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக செயல்விளக்கம் செய்து காட்டியது.
  • நீல நீச்சல் நண்டானது அறிவியல் பூர்வமாக 'போர்டுனஸ் ரெட்டிகுலட்டஸ்' என அழைக்கப் படுவதுடன் இது உவர்நீர் மீன்வளர்ப்பில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான வணிக ரீதியான கடல் நண்டு இனமாகும்.
  • ICAR-CIBA நிறுவனமானது, இளம் நண்டு பொரிப்பகம், நாற்றங்கால் வளர்ப்பு, வளர்ப்பகப் பண்ணை நடைமுறைகள் மற்றும் சிறப்பாக உருவாக்கப்பட்ட BSCrabPlus எனப்படும் குருணைத் தீவனம் உள்ளிட்ட முழுமையான தொழில்நுட்பத் தொகுப்பை உருவாக்கியுள்ளது.
  • இந்த செயல்விளக்கமானது, இந்நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்ட பொரிப்பக இளம் நண்டுகள் மற்றும் BSCrabPlus தீவனத்தைப் பயன்படுத்தி, சென்னையில் உள்ள முட்டுக்காடு பரிசோதனை நிலையத்தில் நடத்தப்பட்டது.
  • வணிக ரீதியான நண்டு வளர்ப்பை மேம்படுத்துதல், விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்தல் மற்றும் இந்தியாவில் நிலையான உவர்நீர் மீன்வளர்ப்பை ஆதரித்தல் ஆகியவற்றை இத்தொழில்நுட்பம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்