TNPSC Thervupettagam

நுகர்வோர் குறைதீர்வு விகிதம்

August 21 , 2025 16 hrs 0 min 18 0
  • பத்து மாநிலங்களும் தேசிய நுகர்வோர் குறை தீர்வு ஆணையமும் (NCDRC) ஜூலை மாதத்தில் 100 சதவீதத்திற்கும் அதிகமான வழக்குத் தீர்வு விகிதத்தை அடைந்தன.
  • NCDRC ஆனது 122% குறை தீர்வு வழங்கல் விகிதத்தைப் பதிவு செய்தது.
  • தமிழ்நாடு 277% உடன் முன்னிலை வகித்தது, அதைத் தொடர்ந்து இராஜஸ்தான் 214% மற்றும் தெலுங்கானா 158% விகிதங்களைக் கொண்டுள்ளன.
  • இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகியவற்றில் தலா 150% என்ற விகிதமும், மேகாலயாவில் 140% என்ற விகிதமும் பதிவாகின.
  • இ-ஜாக்ரிதி தளம் தொடங்கப்பட்டதிலிருந்து, வெளிநாடுவாழ் இந்தியர்கள் உட்பட இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்கள் அதில் பதிவு செய்துள்ளனர்.
  • இந்த ஆண்டு, இந்தத் தளத்தின் மூலம் 85,531 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
  • 2025 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதியன்று நுகர்வோர் விவகாரத் துறையால் தொடங்கப் பட்ட இ-ஜாக்ரிதி தளம் ஆனது, குறை தீர்க்கும் கட்டமைப்பினை மேலும் பரிமாற்றியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்