விவான் சாவ்சாரியா, அரியானா அகர்வால் மற்றும் அவ்யானா மேத்தா ஆகிய 16 வயதுடைய மூன்று இந்தியப் பதின்ம வயதினர், Plas-Stick என்ற மட்கக்கூடிய நீர் சுத்திகரிப்பு கண்டுபிடிப்பை உருவாக்கியதற்காக உலகளாவிய எர்த் பிரைஸ் - உலகளாவிய வெற்றியாளர்கள் விருதை வென்றுள்ளனர்.
Plas-Stick என்பது தண்ணீரிலிருந்து நுண்நெகிழிகளை அகற்றுவதற்காக புளியம்பழ விதைக் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு தூள் ஆகும்.
இது நுண்நெகிழித் துகள்களை ஈர்த்து, அவற்றை ஒன்றாகக் கட்டியாக்குகிறது; பின்னர் இந்த கட்டிகளை ஒரு சிறிய கையிலடங்கக் கூடிய காந்தத்தைப் பயன்படுத்தி அகற்றி விடலாம்.
இம்முறை மின்சாரம் தேவையில்லாதது, குறைந்த செலவிலானது மற்றும் கிராமப்புற மற்றும் குறைந்த வளங்களைக் கொண்ட பகுதிகளுக்காக வடிவமைக்கப்பட்டதாகும்.
இந்தத் திட்டம் இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) கவுஹாத்தியின் ஆதரவுடன் உருவாக்கப் பட்டதுடன், இதற்காக 12,500 அமெரிக்க டாலர் நிதியுதவியும் கிடைத்து உள்ளது.