நேட்டோ நாடுகளின் குழாய் அமைப்புத் திட்டத்தில் (NPS) இணையும் போலந்து
October 7 , 2025 24 days 71 0
போலந்து நாடானது, 4.7 பில்லியன் யூரோ மதிப்பிலான NATO/நேட்டோ (வட அட்லாண்டிக் நாடுகளின் ஒப்பந்த அமைப்பு) நாடுகளின் குழாய் அமைப்பில் (NPS) இணைவதற்கான திட்டத்தை அறிவித்துள்ளது.
NATO குழாய் அமைப்பு என்பது ஐரோப்பா முழுவதும் இராணுவ நடவடிக்கைகளுக்கான எரிபொருள் மற்றும் மசகு எண்ணெய் வழங்கும் 10,000 கிலோ மீட்டர் நீளத்திலான வலையமைப்பாகும்.
பனிப்போரின் போது, போலந்து வார்சா ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருந்ததுஎனவே நேட்டோ குழாய் இணைப்புகள் ரஷ்யா மற்றும் பெலாரஸுக்கு அருகிலுள்ள அதன் தளங்கள் வரை அமைக்கப்படவில்லை.
ஜெர்மனியிலிருந்து நேட்டோவின் கூட்டுப் படை பயிற்சி மையத்தின் தாயகமான பைட்கோஸ் பகுதியில் உள்ள அதன் இராணுவ தளத்திற்கு 300 கிலோ மீட்டர் நீளக் குழாய் இணைப்பினை அமைக்க போலந்து திட்டமிட்டுள்ளது.
போலந்து மற்றும் PERN ஆகியவற்றினால் கட்டமைக்கப்பட்டு இயக்கப்படும் இந்தத் திட்டமானது 32 நேட்டோ நட்பு நாடுகளின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும்போது போலந்து நாடானது நேட்டோ நாடுகளின் அதிக இராணுவ செலவினங்களைக் கொண்ட நாடாகும் மற்றும் ரஷ்யாவுடனான தொடர்ச்சியான பதட்ட சூழல்களுக்கு மத்தியில் உக்ரைனின் முக்கிய நட்பு நாடாகவும் உள்ளது.