கோர்கா மாவட்டத்தில் உள்ள நேபாளத்தின் புத்தி கண்டகி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, இது உள்கட்டமைப்புகளை சேதப்படுத்தியது.
திடீர் வெள்ளம் என்பது கடுமையான மழை, மேக வெடிப்பு, திடீரென நீர் வெளியேறுவது அல்லது தற்காலிக நதி அடைப்புகள் உடைந்து போவது போன்றவற்றால் சில நிமிடங்கள் அல்லது மணிநேரங்களுக்குள் உருவாகும் திடீர், விரைவான வெள்ளப்பெருக்கு ஆகும்.
இவை பெருமளவிலான நீர், சேறு, பாறைகள் மற்றும் குப்பைகளை அடித்துச் செல்வதால், திடீர் அழிவையும் உயிர் இழப்பையும் ஏற்படுத்துகின்றன.
நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில், சியுரிபாஸ் என்ற இடத்திற்கு மேலே ஏற்பட்ட நிலச்சரிவு சும்கே கோலா நீரோடையை தடுத்ததாகக் கூறப்படுகிறது இதனால் கீழ் நோக்கி வெள்ள நீர் திடீரென வெளியேறின.
இமயமலையில் பின்வாங்கும் பனிப்பாறைகள், நிலையற்ற சரிவுகள், பனிப்பாறை ஏரிகள் வெடிப்பது மற்றும் தளர்வான படிவுகள் ஆகியவை திடீர் வெள்ள அபாயங்களை அதிகரிக்கச் செய்யும்.