இந்தியாவின் இசை நிகழ்ச்சி பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் நேரடி நிகழ்வுகள் மேம்பாட்டுப் பிரிவினை (LEDC) அமைத்துள்ளது.
LEDC ஆனது 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நேரடி நிகழ்வுகளுக்கான ஒற்றைச் சாளர வசதி அமைப்பாக உருவாக்கப்பட்டது.
இந்தியா முழுவதும் இசை நிகழ்ச்சிகள், நேரடி நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளின் வளர்ச்சியை ஆதரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியாவின் ஒழுங்கமைக்கப்பட்ட நேரடி நிகழ்வுகள் சந்தை 2024 ஆம் ஆண்டில் 20,861 கோடி ரூபாய் மதிப்புடையதாக மதிப்பிடப்பட்டது.
இந்தத் துறை 18% கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் (CAGR) வளரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
நேரடி நிகழ்வுகள் பெரிய அளவிலான வேலைவாய்ப்பை உருவாக்குகின்றன மற்றும் சுற்றுலா மற்றும் கலாச்சார நடவடிக்கைகளை ஆதரிக்கின்றன.