TNPSC Thervupettagam

வேளாண் சார் புத்தொழில் நிறுவனங்களுக்கான BHARATI

January 11 , 2026 14 hrs 0 min 44 0
  • வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) BHARATI முன்னெடுப்பினைத் தொடங்கியது.
  • BHARATI என்பது இந்தியாவின் வேளாண் தொழில்நுட்பம், மீள்தன்மை, முன்னேற்றம் மற்றும் ஏற்றுமதி செயல்படுத்தலுக்கான காப்பு மையத்தைக் குறிக்கிறது.
  • இந்தத் திட்டம் வேளாண் உணவு மற்றும் வேளாண் தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களை ஆதரிக்கிறது என்பதோடு மேலும் அவை உலகளாவிய சந்தைகளை அடைய உதவுகிறது.
  • சர்வதேச அளவில் தங்கள் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்த சிறந்த 10 புத்தொழில் நிறுவனங்களை APEDA தேர்ந்தெடுக்கும்.
  • APEDA ஆணையத்தின் வேளாண் ஏற்றுமதி ஆனது 2025–26 ஆம் ஆண்டு ஏப்ரல்-நவம்பர் மாத காலக் கட்டத்தில் சுமார் 7% அதிகரித்து, 18.6 பில்லியன் டாலரை எட்டியது.
  • 2025–26 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த வேளாண் ஏற்றுமதி 30 பில்லியன் டாலரைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • 120க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்களைக் கொண்ட உலகளாவிய உணவு மற்றும் பானங்கள் கண்காட்சியான Indusfood 2026 என்ற நிகழ்வில் இந்த முன்னெடுப்பு குறித்து அறிவிக்கப்பட்டது.
  • APEDA வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்