2026 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற 79-வது உலக சுகாதார சபையானது, பக்கவாதத்தை ஒரு முக்கிய பொது சுகாதார முன்னுரிமையாக அங்கீகரிக்கும் தனது முதல் தீர்மானத்தை நிறைவேற்றியது.
இத்தீர்மானம் பக்கவாதம் தடுப்பு, சரியான நேரத்திலான சிகிச்சை, மறுவாழ்வு மற்றும் நோயாளிகளுக்கான நீண்டகால ஆதரவு ஆகியவற்றில் வலுவான நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கிறது.
பக்கவாதம் என்பது மூளைக்கான இரத்த ஓட்டத்தைத் தடைசெய்யும் அடைப்பு அல்லது இரத்தப்போக்கு ஆகியவற்றால் ஏற்படும் ஒரு மருத்துவ அவசரநிலையாகும், இது இறப்பு அல்லது ஊனத்திற்கு வழி வகுக்கும்.
உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 12 மில்லியன் (1.2 கோடி) மக்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர், மேலும் அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இறக்கின்றனர்.
இந்தியாவில், பக்கவாத பாதிப்பு ஆண்டுதோறும் 1,00000 மக்களுக்கு 108 முதல் 172 பாதிப்புகள் வரை உள்ளது, மேலும் ஒரு மாதத்திற்குள்ளான இறப்பு விகிதம் 18% முதல் 42% வரை உள்ளது.
உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், புகையிலை பயன்பாடு, உடல் பருமன், ஆரோக்கியமற்ற உணவு, மதுபான துஷ்பிரயோகம், உடற்பயிற்சியின்மை மற்றும் காற்று மாசுபாடு ஆகியவை பக்கவாதத்திற்கான முக்கிய ஆபத்துக் காரணிகளாகும்.