January 22 , 2026
4 days
107
- சூரிய ஆற்றல் பயன்பாடு ஆனது தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மின் கட்டமைப்பு சார் மின்சாரப் பயன்பாட்டை சுமார் 46% குறைத்ததாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
- இந்திய மனித குடியேற்ற நிறுவனத்துடன் (IIHS) இணைந்து இந்த அறிக்கை தயாரிக்கப் பட்டது.
- இந்த அறிக்கை மாநிலத்தின் பசுமைப் பள்ளிகள் முன்னெடுப்பின் கீழ் 97 அரசுப் பள்ளிகளை ஆய்வு செய்தது.
- ஒவ்வொரு பள்ளியும் ஆண்டுக்கு சராசரியாக 3,572 மின்சார அலகுகளையும் சுமார் 26,000 ரூபாயும் சேமித்தது.
- பசுமைப் பள்ளிகள் திட்டம் கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 300 அரசுப் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
- மாநில அளவிலான விரிவாக்கம் அரசு, உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளில் 91% வரை மின் நுகர்வை ஈடுசெய்யும் என்று ஆய்வு மதிப்பிடுகிறது.
Post Views:
107