பசுமையில்ல வாயு உமிழ்வின் தீவிரத்தன்மைக்கான இலக்கு வரைவு விதிகள்
April 26 , 2025 4 days 65 0
2023 ஆம் ஆண்டு கார்பன் மதிப்பு சார் வர்த்தகத் திட்டத்தின் கீழ், 2025 ஆம் ஆண்டு பசுமை இல்ல வாயு உமிழ்வின் தீவிரத் தன்மை குறித்த இலக்கு விதிகளை அறிமுகப் படுத்தும் வரைவு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்த முதன்மை விதிகளானது எரிசக்திப் பாதுகாப்பு சட்டம் 2001 மற்றும் சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986 ஆகியவற்றின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது.
இது எரிசக்தித் திறன் வாரியத்தினால் (BEE) நன்கு அமல்படுத்தப்படும் என்பதோடு இது நியமிக்கப்பட்ட தொழில்துறைகளுக்கான உமிழ்வு தீவிரத் தன்மை இலக்குகளை முன் மொழிகிறது.
2023-24 ஆம் ஆண்டு அடிப்படை தரவுகளின் அடிப்படையில், 2025-26 முதல் 2026-27 ஆம் ஆண்டு வரையிலான ஒரு இணக்கக் காலத்திற்கு, ஒரு டன் உற்பத்தியில் CO₂ வாயு உமிழ்விற்குச் சமமான உமிழ்வுகளின் அடிப்படையில் சில இலக்குகள் வரையறுக்கப் படும்.
அலுமினியம் மற்றும் சிமென்ட் போன்ற அதிக உமிழ்வு வெளியிடும் துறைகளையும் இந்த விதிகள் உள்ளடக்கும்.
வேதாந்தா, ஹிண்டால்கோ, NALCO மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட் போன்ற சில நிறுவனங்கள் குறிப்பிட்ட அடிப்படை மற்றும் இலக்கு மதிப்புகளை ஒதுக்கியுள்ளன.
உதாரணமாக, 2023-24 ஆம் ஆண்டில் 12,38,336 டன் அலுமினியத்தினை உற்பத்தி செய்த ஒடிசாவின் ஜார்சுகுடாவில் உள்ள வேதாந்தாவின் ஸ்மெல்டர் II ஆனது, 2025-26 மற்றும் 2026-27 ஆகிய ஆண்டுகளில் முறையே 13.2260 மற்றும் 12.8259 டன் பசுமை இல்ல வாயு உமிழ்வு தீவிரத் தன்மையினைக் குறைக்க வேண்டும்.