பாகிஸ்தான் குடிமக்கள் இனி SAARC நுழைவு இசைவுச் சீட்டு விலக்கு திட்டத்தின் (SVES) கீழான நுழைவு இசைவுச் சீட்டுகளின் மூலம் இந்தியாவிற்குப் பயணிக்க அனுமதிக்கப் பட மாட்டார்கள்.
SVEC என்பது SAARC நுழைவு இசைவுச் சீட்டு விலக்கு என்ற திட்டத்தின் சுருக்கமாகும்.
இந்தத் திட்டத்தின் கீழ், சில வகைப் பிரமுகர்களுக்கு சிறப்பு பயண ஆவணம் வழங்கப் படுகிறது.
இந்தச் சிறப்பு ஆவணமானது, அவர்களுக்கு நுழைவு இசைவுச் சீட்டுகள் மற்றும் பிற பயண ஆவணங்களுக்கான தேவையிலிருந்து விலக்கு அளிக்கிறது.
தற்போது, இப் பட்டியலில் பல்வேறு முக்கியப் பிரமுகர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மூத்த அரசாங்க அதிகாரிகள், தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உட்பட 24 வகை மக்கள் உள்ளனர்.