பூடான் அரசானது, அதன் பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கும், அறிவுப் புலப் பெயர்தலைக் குறைப்பதற்காக வேண்டி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் நீர் மின்னாற்றலைப் பயன்படுத்தி பசுமை சார்ந்த இணைய சங்கேதப் பணங்களை உருவாக்கிப் பயன்படுத்துவதற்குமான வழிகளை ஆராய்ந்து வருகிறது.
பசுமை சார் இணைய சங்கேதப் பணங்கள் என்பது புதைபடிவ எரிபொருளுக்குப் பதிலாக காற்று, நீர் அல்லது சூரிய ஆற்றல் போன்ற சில தூய்மையான ஆற்றல் வளங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் எண்ணிம நாணயங்கள் ஆகும்.
பூடான் ஆனது முழுமையாக நீர் மின்னாற்றலில் இயங்குகிறது மேலும் பூடானில் நீர் மின்னாற்றலைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் ஒவ்வொரு எண்ணிம நாணயமும் புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் நாணயத்திற்கு ஈடாக அமைகிறது.