தமிழ்நாட்டில் பசு மற்றும் கன்றுக்குட்டிகளை வதைப்பதற்கு முழுமையான தடை விதிக்க உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் (HC) உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் (SC) இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றமானது 2026 ஆம் ஆண்டு மே 27 அன்று மாநிலம் தழுவிய தடையை விதித்திருந்தது ஆனால் தமிழ்நாடு அரசு இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
1958 ஆம் ஆண்டின் தமிழ்நாடு விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி, வேலை செய்வதற்கும் இனப்பெருக்கத்திற்கும் தகுதியற்றவை என சான்றளிக்கப்பட்ட 10 வயதிற்கு மேற்பட்ட பசுக்களை வதைக்க அனுமதியுள்ளது என்று மாநில அரசு வாதிட்டது.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவில் முதன்நோக்கிலேயே திருத்தம் தேவைப்படுவதாகக் குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், இந்த முழுமையான தடைக்கு இடைக்காலத் தடை விதித்தது.
அத்தோடு, தற்போதைய சட்டங்கள் உரிமம் பெற்ற இறைச்சிக் கூடங்களில் வதை செய்வதை முறைப்படுத்துகின்றனவே தவிர, முழுமையான தடையை விதிக்க வில்லை என்றும் நீதிமன்றம் சுட்டிக் காட்டியது.