தமிழக இடைத்தேர்தல் அறிவிப்பு மீது சென்னை உயர்நீதிமன்றம்
July 15 , 2026 13 days 143 0
2026 ஆம் ஆண்டு ஜூலை 31 வரை ஐந்து தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களை அறிவிப்பதில் இருந்து இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு (ECI) சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை மற்றும் கரூர் ஆகிய தொகுதிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தும், ஆனால் அவர்களின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள் இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
தேர்தல் வழக்குகளை முடித்து வைப்பதற்கு முன்பாக இடைத்தேர்தல்களை நடத்தினால், பின்னர் அந்த மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில் ஒரே தொகுதியை இருவர் பிரதிநிதித்துவப்படுத்துவதாக உரிமை கோரும் சூழ்நிலை உருவாகலாம் என்று நீதிமன்றம் கருதியது.
இந்த மனுவில் 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 151A பிரிவைக் குறிப்பிட்டுள்ளது என்பதோடு இது சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள விதி விலக்குகளுக்கு உட்பட்டு ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் மூலம் காலியிடத்தை நிரப்ப வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது.
ஒரே தொகுதி தொடர்பான தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது இடைத்தேர்தல் நடத்தப்படக் கூடாது என்று கூறும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளையும் (1967, 2011 மற்றும் 2018) இந்த மனு சுட்டிக் காட்டியுள்ளது.