TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் கருவுறுதல் விகிதம் 2026

July 14 , 2026 17 hrs 0 min 6 0
  • தமிழ்நாட்டின் மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) 2026 ஆம் ஆண்டில் 1.3 ஆகக் குறைந்து உள்ளதுஎன்பதுடன் இது மக்கள்தொகை நிலைத்தன்மைக்குத் தேவையான மாற்று அளவான 2.1 ஐ விடக் குறைவாகும்.
  • மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) என்பது ஒரு பெண் தனது பேறு காலத்தில் பெற்றெடுக்கும் குழந்தைகளின் சராசரி எண்ணிக்கையைக் குறிக்கிறது.
  • 2025 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் TFR 1.4 ஆக இருந்தது, அதே சமயம் இந்தியாவின் ஒட்டு மொத்த TFR 1.9 ஆக உள்ளது.
  • மாநிலத்தில் முதியோர் மக்கள் தொகை அதிகரித்து வருவதுடன் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 16% ஆக உள்ளனர்; இது அடுத்த 10 ஆண்டுகளில் 20% ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
  • பொருளாதாரக் காரணிகள், பணியிடங்களில் பெண்களின் பங்களிப்பு, தாமதமான திருமணங்கள் மற்றும் குடும்ப விருப்பங்களில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை கருவுறுதல் விகிதம் சரிவை ஏற்படுத்தும் காரணிகளில் அடங்கும்.
  • தமிழ்நாட்டில் பணியிடங்களில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளதுடன் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு 100 வேலை பார்க்கும் பெண்களிலும் 41 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
  • மருத்துவமனைகளில் பிரசவம், பிரசவங்களுக்கு இடையே 2 முதல் 3 ஆண்டுகள் இடைவெளி, தாய்மார்கள் சுகாதார ஆதரவு மற்றும் சுகாதாரச் சேவைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றை அரசு வலியுறுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்