TNPSC Thervupettagam

பஞ்சாப் சமய அவமதிப்புத் தடுப்புச் சட்டம் 2026

April 22 , 2026 7 days 62 0
  • ஜாகத் ஜோத் ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப் சத்கார் (திருத்த) மசோதா, 2026க்கு பஞ்சாப் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
  • இந்த மசோதா 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று பஞ்சாப் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
  • இது ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப்பை அவமதிப்பதை கடுமையான சட்டக் கட்டமைப்பின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாக்குகிறது.
  • இத்தகையக் குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ₹25 லட்சம் வரை அபராதம் உள்ளிட்ட தண்டனைகளை இது வழங்குகிறது.
  • இந்தச் சட்டம் முந்தைய ஜாகத் ஜோத் ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப் சத்கார் சட்டம், 2008-ஐ வலுப்படுத்துகிறது.
  • அவமதிப்புச் சம்பவங்களைத் தடுப்பதையும், ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப்பின் சமய புனிதத்தைப் பாதுகாப்பதை உறுதி செய்வதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்