பத்தாண்டிற்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு
January 9 , 2023 952 days 425 0
பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணிகளானது இந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நிர்வாக எல்லைகளை தீர்மானிப்பதற்கானத் தேதியானது ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளதாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
விதிமுறைகளின்படி, மாவட்டங்கள், துணை மாவட்டங்கள், வட்டங்கள், தாலுகாக்கள் மற்றும் காவல் நிலையங்கள் போன்ற நிர்வாக அலகுகளின் எல்லை வரம்புகள் நிர்ணயிக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு மட்டுமே மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்.
கடந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பானது 2011 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.
2021 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் முதல் கட்டமான - தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டை (NPR) புதுப்பித்தல் பணியோடு சேர்த்து வீடுகளின் பட்டியல் மற்றும் வீட்டுகளின் எண்ணிக்கை கணக்கெடுப்பு ஆகியவை 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலத்தில் நடத்தப்பட திட்டமிடப்பட்டது.
ஆனால் COVID-19 பெருந்தொற்று காரணமாக அவை காலவரையின்றி ஒத்தி வைக்கப் பட்டன.
தற்போது மேற்கொள்ளப் பட உள்ள மக்கள்தொகைக் கணக்கெடுப்பானது முதன் முறையாக எண்ணிம முறையிலும் காகிதப் பதிவேடு (கேள்வித்தாள்/படிவங்கள்) ஆகிய இரண்டு வகையிலும் மேற்கொள்ளப்பட உள்ளது.