வாரணாசியில் இருந்து வங்காளதேசம் வழியாக திப்ருகர் வரையிலான பயணத்தினை மேற்கொள்ள உள்ள ‘கங்கா விலாஸ்’ எனப்படும் உலகின் மிக நீளமான நதிப் பயணக் கப்பலானது தொடங்கப்பட உள்ளது.
இது 50 நாட்களில் 3200 கிலோமீட்டர் தொலைவு வரை பயணிக்க உள்ளதோடு, இது இந்தியா மற்றும் வங்காளதேசத்தில் உள்ள 27 நதி நீரோட்டங்கள் வழியாகப் பயணிக்கவும் உள்ளது.
இந்த உல்லாசப் பயணக் கப்பல் ஆனது இதில் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகளுக்கு உலகப் பாரம்பரியத் தளங்கள் உட்பட பல்வேறு கட்டடக்கலை சார்ந்த முக்கியத்துவம் வாய்ந்த 50 இடங்களுக்குப் பயணம் மேற்கொள்ளச் செய்வதற்கான ஒரு வாய்ப்பினை அளிக்கும்.
இது சுந்தரவன கழிமுகக் காடுகள் மற்றும் காசிரங்கா தேசியப் பூங்கா உள்ளிட்ட பல்வேறு தேசியப் பூங்காக்கள் மற்றும் சரணாலயங்கள் வழியாகவும் பயணிக்க உள்ளது.