இந்தியாவின் தலைமை நீதிபதி DY சந்திரசூட் இந்திய உச்ச நீதிமன்றத்தின் மின்னணு முறையிலான அறிக்கைகள் (e-SCR) என்ற திட்டத்தைத் தொடங்க உள்ளதாக அறிவித்து உள்ளார்.
வழக்கறிஞர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர், உச்ச நீதிமன்றத்தின் சுமார் 34,000 தீர்ப்புகள் குறித்த அறிக்கைகளை இலவசமாக அணுகச் செய்வதற்கான வாய்ப்பினை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் தீர்ப்புகள் உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்திலும், கைபேசிச் செயலியிலும், தேசிய நீதித்துறை தரவுக் கட்டமைப்பின் தீர்ப்புகள் அடங்கிய தளத்திலும் கிடைக்கப் பெறும்.
உச்ச நீதிமன்றத்தில் நடுநிலைக் குறிப்பேடுகள் என்ற ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என்றும் இந்தியத் தலைமை நீதிபதி அவர்கள் அறிவித்தார்.
நடுநிலைக் குறிப்பேடுகள் என்பது ஒரு சட்ட ரீதியிலான ஆவணத்தின் வெளியீட்டாளரின் அடையாளத்தினை வெளிப்படுத்தாத தரப்படுத்தப்பட்ட சட்டக் குறிப்பேடாகும்.
இது பாரபட்சமற்ற மற்றும் மெய்மைசார் குறிப்புகளை வழங்குவதற்கு வழிவகை செய்கிறது.
டெல்லி மற்றும் கேரள உயர் நீதிமன்றங்கள் ஏற்கனவே இவ்வகை நடுநிலைக் குறிப்பேடுகளைப் பயன்படுத்துகின்றன.