‘RISE - ஆன்மிக அதிகாரமளித்தல் மூலம் இந்திய நாட்டினை எழுச்சி பெறச் செய்தல்’ என்ற தேசியப் பிரச்சாரமானது ராஜஸ்தானின் மவுண்ட் அபுவில் பிரம்ம குமாரிகள் என்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இது "பொன்மயமான இந்தியா" என்ற ஒரு குறிக்கோளினை நிறைவேற்றும் வகையில் இந்தியக் குடிமக்களை ஆன்மீக ரீதியில் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
சுயமாற்றம் உலக மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்ற கொள்கையில் பிரம்ம குமாரிகள் அமைப்பு நம்பிக்கை கொண்டுள்ளது.