TNPSC Thervupettagam
May 29 , 2026 2 days 85 0
  • குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற சிவில் விருதுகள் வழங்கும் விழாவில் இந்தியக் குடியரசுத் தலைவர் 2026-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை வழங்கினார்.
  • பத்ம விருதுகள் 1954-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டன மற்றும் இவை இந்தியாவின் உயரிய சிவில் விருதுகளில் ஒன்றாகும்.
  • இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகின்றன.
  • 2026-ஆம் ஆண்டில் 19 பெண் விருது பெற்றவர்கள், மரணத்திற்குப் பின் வழங்கப்படும் 16 விருதுகள் மற்றும் வெளிநாட்டவர்கள்/வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRIs)/இந்திய வம்சாவளியினர் (PIOs)/இந்தியாவின் வெளிநாட்டு குடிமக்கள் (OCIs) பிரிவைச் சேர்ந்த 6 பேர் உட்பட மொத்தம் 131 விருதுகள் வழங்கப்பட்டது.
  • தமிழ்நாட்டைச் சேர்ந்த குடல் மற்றும் இரைப்பை சிகிச்சை நிபுணர் கள்ளிப்பட்டி ராமசாமி பழனிசாமி மருத்துவத்துக்கான பத்ம பூஷன் விருதையும், எஸ்.கே.எம். மயிலானந்தன் சமூக சேவைக்கான பத்ம பூஷன் விருதையும் பெற்றனர்.
  • கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம், பொது விவகாரங்கள் மற்றும் சமூகப் பணி போன்ற துறைகளில் சிறப்பான சேவையாற்றியவர்களை இவ்விருதுகள் அங்கீகரிக்கின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்