பத்ம விருதுகள் ஆனது சமூகச் சேவை, கல்வி, இலக்கியம், பொது விவகாரங்கள், கல்வி போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த நபர்களை கௌரவிக்கும் வகையில் வழங்கப் படுகிறது.
முலாயம் சிங் யாதவ், ஜாகீர் உசேன், K.M. பிர்லா, சுதா மூர்த்தி உள்ளிட்ட 106 பேர் இந்த ஆண்டிற்கான பத்ம விருதுகளைப் பெற்றுள்ளனர்.
இது இந்தியாவில் வழங்கப்படும் உயரிய குடிமை விருதுகளில் ஒன்றாகும்.
இந்த விருதானது பத்ம பூஷன், பத்ம விபூஷன், பத்மஸ்ரீ என மூன்று பிரிவுகளில் வழங்கப் படுகிறது.
பத்ம விருதுகள் இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களால் வழங்கப்படுகின்றன.
திருமதி வாணி ஜெய்ராம், K.கல்யாணசுந்தரம், பாலம் கல்யாண சுந்தரம், வடிவேல் கோபால் & மாசி சடையன் மற்றும் டாக்டர் கோபால்சாமி வேலுச்சாமி ஆகியோர் இந்த ஆண்டிற்கான விருதினைப் பெற்ற தமிழ்நாட்டினைச் சேர்ந்த நபர்கள் ஆவர்.