TNPSC Thervupettagam

பயணியர் கப்பல் சுற்றுலா விரிவாக்கம்

August 29 , 2025 8 days 87 0
  • புதிய இடங்களுக்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் திட்டமிடப்பட்டு தமிழ்நாட்டில் பயணியர் கப்பல் சுற்றுலா உருவாக்கப்பட்டு வருகிறது.
  • இராமேஸ்வரம் மற்றும் கன்னியாகுமரி ஆகியவை சாத்தியமான பயணியர் கப்பல் சுற்றுலா இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
  • தேவிப்பட்டினம், குருசடை தீவு, குந்துக்கல், வில்லூண்டி தீர்த்தம், அக்னி தீர்த்தம், கோதண்டராமர் கோயில் மற்றும் அரிச்சல் முனை ஆகியவை ஒரு முன்மொழியப்பட்ட பயணியர் கப்பல் சுற்றுலா சுற்றுத் தளங்கள் ஆகும்.
  • சுற்றுலாப் பயணிகள் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் அக்னி தீர்த்தம் மற்றும் வில்லூண்டி தீர்த்தத்தில் மிதக்கும் படகுத் துறைகள் கட்டுமானத்தில் உள்ளன.
  • அந்தமான் மற்றும் நிக்கோபாரின் பல்வேறு தீவுகளுக்கும், நிலப்பகுதிக்கும் இடையேயான பயணியர் கப்பல் போக்குவரத்து இணைப்பு குறித்து ஆராயும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • மலேசியா, இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகியவற்றுடன் சர்வதேச பயணியர் கப்பல் சுற்றுலா இணைப்பு குறித்த விவாதங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
  • கப்பல் சுற்றுலாத் துறையில் உள்ள வாய்ப்புகளை ஆராய இந்தியாவிற்கும், மலேசியாவிற்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • பிராந்தியக் கப்பல் போக்குவரத்து இணைப்புக்காக இந்தோனேசியா மற்றும் தாய்லாந்துடன் மற்ற திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
  • தற்போது இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைகளுக்கு இடையே இயங்குகின்ற கோர்டெலியா பயணியர் சுற்றுலா நிறுவனமானது கிழக்குக் கடற்கரையில் அதன் பயணத்தினை விரிவுபடுத்துகிறது.
  • ஒரு புதிய கோர்டெலியா குரூஸ் கப்பல் ஆனது சென்னையை அதன் துறைமுகமாகக் கொண்டு கிழக்குக் கடற்கரையில் நிரந்தரமாக நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்