TNPSC Thervupettagam

பருப்பு வகைகள் துறையில் ஆத்மநிர்பாரதா

September 10 , 2025 45 days 78 0
  • நிதி ஆயோக் அமைப்பானது, "Strategies and Pathways for Accelerating Growth in Pulses towards the Goal of Atmanirbharta/ஆத்மநிர்பாரதா இலக்கை நோக்கி பருப்பு வகைகள் துறையின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான உத்திகள் மற்றும் பாதைகள்" என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டது.
  • இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத், ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா முழுவதும் 885 விவசாயிகளின் கள ஆய்வின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப் பட்டுள்ளது.
  • இந்தியா பருப்பு வகைகளை உற்பத்தி செய்யும் உலகின் மிகப்பெரிய நாடாகவும், நுகர்வோராகவும் உள்ளது என்பதோடு உணவுப் பாதுகாப்பு மற்றும் நிலையான முறையிலான விவசாயத்திற்கு இது மிகவும் முக்கியமானதாகும்.
  • 2015–16 ஆம் ஆண்டில் 16.35 மில்லியன் டன்னாக இருந்த பருப்பு உற்பத்தியானது, 2022–23 ஆம் ஆண்டில் 26.06 மில்லியன் டன்னாக உயர்ந்தது என்பதோடு இது இறக்குமதியின் சார்ந்திருக்கும் நிலையினை 29 சதவீதத்திலிருந்து 10.4% ஆகக் குறைந்தது.
  • 2025–26 ஆம் ஆண்டிற்கான மத்திய நிதி ஒதுக்கீட்டில் துவரம் பருப்பு, உளுந்து மற்றும் பயறு வகைகளில் கவனம் செலுத்தி, பருப்பு வகைகளில் தன்னிறைவு பெற்ற இந்தியாவிற்கான/ஆத்மநிர்பாரதத்திற்கான திட்டம் அறிவிக்கப்பட்டது.
  • இந்த அறிக்கையானது, 2030 ஆம் ஆண்டில் பருப்பு உற்பத்தி 30.59 மில்லியன் டன்னையும் 2047 ஆம் ஆண்டில் 45.79 மில்லியன் டன்னையும் எட்டும் என்று கணித்து உள்ளது.
  • முழுமையாகப் பயன்படுத்தப்படாத நிலங்களைப் பயன்படுத்தி கிடைமட்ட விரிவாக்கம் மற்றும் விளைச்சல் மற்றும் வேளாண் நடைமுறைகளை மேம்படுத்துவதன் மூலம் செங்குத்து விரிவாக்கம் ஆகியவை இந்த உத்தியில் அடங்கும்.
  • மாவட்ட வாரியான தொகுதியாக்கம், உயர்தர விதைகளை ஏற்றல் மற்றும் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளால்  மேற்கொள்ளப்பட்ட "ஒரு தொகுதி-ஒரு விதை கிராமம்" மையங்களை இது பரிந்துரைக்கிறது.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் பருப்பு வகைகளின் உள்நாட்டு விநியோகத்தினை 48.44 மில்லியன் டன்னாகவும், 2047 ஆம் ஆண்டுக்குள் 63.64 மில்லியன் டன்னாகவும் அதிகரிப்பதே இதன் இலக்காகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்