பல் மருத்துவர்கள் ஒரு இணைப்புப் படிப்பிற்குப் பிறகு பொது மருத்துவர்களாக செயல்பட அனுமதியளிக்க வேண்டி இந்திய பல் மருத்துவக் கழகத்தினால் அளிக்கப்பட்ட முன்மொழிவுகளை நிதி ஆயோக் ஒப்புக்கொண்டுள்ளது.
இது நாட்டில் குறிப்பாக கிராமப்புறங்களில் நிலவும் மருத்துவர்களின் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக மேற்கொள்ளப்படும் திட்டமாகும்.
இது பல் மருத்துவ படிப்பிற்குப் பிறகு 3 ஆண்டு கால இணைப்புப் படிப்பைப் பரிந்துரை செய்கிறது.
இந்த படிப்பின் அனைத்து வரையறைகளும் எம்பிபிஎஸ் படிப்பிற்கு பரிந்துரைக்கப்படும் பாடத்திட்டம், தேர்வு முறைகள், மதிப்பீட்டு முறைகள், பட்டம் மற்றும் பதிவு ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.