TNPSC Thervupettagam

பழங்குடியின கிராமங்களுக்கான தொலைநோக்குத் திட்டம் 2030 அறிவிப்பு

October 7 , 2025 12 days 56 0
  • பழங்குடியின கிராமங்களுக்கான தொலைநோக்குத் திட்டம் 2030 அறிவிப்பு ஆனது 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 02 ஆம் தேதியன்று சிறப்பு கிராம சபைகளில் நிறைவேற்றப்பட்டது.
  • உலகின் மிகப்பெரியப் பழங்குடியின அடிமட்ட தலைமைத்துவத் திட்டமான ஆதி கர்மயோகி அபியான் திட்டத்தினை பழங்குடியின விவகார அமைச்சகம் தொடங்கி உள்ளது.
  • இந்தத் திட்டம் ஆனது, 30 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள 1 லட்சம் கிராமங்கள் மற்றும் தோலாக்களில் 11.5 கோடிக்கும் மேற்பட்ட பழங்குடியினக் குடிமக்களை சென்றடைந்தது.
  • கிராமவாசிகளிடமிருந்து பெறப்படும் வாராந்திர தன்னார்வ சேவையுடன் ஒரு லட்சம் ஆதி சேவா மையங்கள் அல்லது குடிமக்கள் சேவை மையங்கள் நிறுவப்படுகின்றன.
  • செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் ஆதி வாணி செயலி, பழங்குடியின சமூகங்களை அவர்களது தாய்மொழிகளில் அரசு அதிகாரிகளுடன் இணைக்கிறது, இதன் மூலம் நிகழ்நேர தகவல் தொடர்பு கிடைக்கப்பெறும்.
  • 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல், 20 லட்சம் அதிகாரிகள், சுயஉதவிக்குழுப் பெண்கள் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் அரசுத் திட்டங்களை கடை நிலை வரை வழங்குவதை உறுதி செய்வதற்காக ஆதி கர்மயோகிகளாகப் பயிற்சி பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்