TNPSC Thervupettagam

பாக்ஸ் சிலிக்கா முன்னெடுப்பு – பிலிப்பைன்ஸ்

April 19 , 2026 15 hrs 0 min 28 0
  • உலகளாவிய குறைக்கடத்தி மற்றும் தொழில்நுட்ப விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்துவதற்காக, அமெரிக்கா தலைமையிலான 'பாக்ஸ் சிலிக்கா' முன்னெடுப்பில் பிலிப்பைன்ஸ் இணைந்துள்ளது.
  • மூலப்பொருட்கள் முதல் அதிநவீன சில்லு உற்பத்தி வரையிலான முழுமையான தொழில்நுட்ப விநியோகச் சங்கிலியைப் பாதுகாப்பதற்காக அமெரிக்காவால் இந்த முன்னெடுப்பு வழிநடத்தப்படுகிறது.
  • பிலிப்பைன்ஸில் உள்ள லுசான் பொருளாதார வழித்தடத்தில் 4,000 ஏக்கர் பரப்பளவிலான ஒரு தொழில்துறை மையம் உருவாக்கப்படும்.
  • இந்த மையம் குறைக்கடத்திகள், மின்னணு சாதனங்கள் மற்றும் நிக்கல், கோபால்ட் மற்றும் தாமிரம் போன்ற முக்கியமான கனிமங்களை பதப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.
  • இந்தியா, தென் கொரியா, சிங்கப்பூர், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுடன் இணைந்து, இந்த முன்னெடுப்பின் 13வது உறுப்பு நாடாக பிலிப்பைன்ஸ் மாறியுள்ளது.
  • இந்தத் திட்டம் சீனா மீதான சார்பைக் குறைப்பதற்கும், நட்பு நாடுகளின் விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்துவதற்கும் கூட்டணியுறவு நாடுகளுடன் இணைந்து விநியோக வலையமைப்பை உருவாக்குதல் முறையை ஊக்குவிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்