பாங்காக் இணையவழி குற்றத் தடுப்புப் பாதுகாப்பு கட்டமைப்பு
October 20 , 2026 3 days 65 0
தாய்லாந்து வங்கியுடன் இணைந்து, சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கிக் குழுமம் (WBG) தாய்லாந்தின் பாங்காக்கில் பாங்காக் திட்டவரைவை (Bangkok Blueprint) வெளியிட்டன.
இது டிஜிட்டல் நிதிச் சேவைகளில் இணைய வழியிலான மோசடிகளைத் தடுக்க, கண்டறிய மற்றும் நிவர்த்தி செய்வதற்கான ஒரு கட்டமைப்பை வழங்குகிறது.
இது சட்ட அடிப்படைகள், மோசடித் தடுப்பு, அமலாக்கம், ஒத்துழைப்பு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு உள்ளிட்ட ஐந்து தூண்களின் கீழ் 12 முக்கியப் பரிசீலனைகளைக் கொண்டுள்ளது.
இது நாடுகள் முழுவதும் உள்ள அரசாங்கங்கள், நிதி நிறுவனங்கள், சட்ட அமலாக்க முகவர் அமைப்புகள் மற்றும் டிஜிட்டல் தளங்களுக்கு இடையே ஒத்துழைப்பை ஊக்குவிக்கிறது.
தாய்லாந்து வங்கியின் ஆளுநரின் கூற்றுப்படி, 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய மோசடி இழப்புகளில் ஆசியா 67% பங்கைக் கொண்டுள்ளது.