TNPSC Thervupettagam

புதிய உணவுப் பாதுகாப்பு விதிகள் 2026

October 20 , 2026 3 days 78 0
  • இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமானது (FSSAI) உணவுப் பாதுகாப்பு விதிகளில் மாற்றங்களை முன்மொழிந்துள்ளது.
  • ஆறு மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களில் சுக்ரோஸ் மற்றும் பிரக்டோஸ் சேர்ப்பதைத் தடை செய்ய இந்த முன்மொழிவு முற்படுகிறது.
  • தற்போது, இந்த சர்க்கரைகளை குழந்தைகளின் உணவுகளில் சேர்க்கலாம், அவற்றின் ஒருங்கிணைந்த அளவு மொத்த கார்போஹைட்ரேட்டுகளில் 20% ஆக வரம்பிடப் பட்டு உள்ளது.
  • இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமானது தேயிலையில் உள்ள பூச்சிக்கொல்லிகளுக்கான அதிகபட்ச எச்ச வரம்புகளை (MRLs) அசிடாமிப்ரிடுக்கு ஒரு மில்லியனுக்கு 20 பாகங்கள் (ppm) மற்றும் இமிடாக்ளோப்ரிடுக்கு 50 ppm என முன்மொழிந்துள்ளது.
  • அதிகபட்ச எச்ச வரம்புகளானது (MRLs) உணவில் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட பூச்சிக் கொல்லி எச்சங்களின் அதிகபட்ச செறிவைக் குறிப்பிடுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்