TNPSC Thervupettagam

தேசிய உத்திசார் வர்த்தகக் கட்டுப்பாட்டு மையம்

October 20 , 2026 4 days 86 0
  • மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரால் புது தில்லியில் உள்ள வாணிஜ்ய பவனில் தேசிய உத்திசார் வர்த்தகக் கட்டுப்பாட்டு மையம் (NSTCC) தொடங்கப் பட்டது.
  • இந்த மையமானது வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகத்தின் (DGFT) ஒருங்கிணைப்புடன், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள வர்த்தகத் துறையால் உருவாக்கப்பட்ட மையப்படுத்தப்பட்ட வர்த்தக நுண்ணறிவு மற்றும் தரவுப் பகுப்பாய்வு மையமாகும்.
  • நிகழ்நேர வர்த்தக கண்காணிப்பு, சான்று அடிப்படையிலான கொள்கை உருவாக்கம், அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் விரைவான வர்த்தக அனுமதிகளை செயல் படுத்துவது இதன் நோக்கமாகும்.
  • இது இறக்குமதியாளர் ஏற்றுமதியாளர் குறியீடு (IEC), முன்கூட்டிய அங்கீகாரம், ஏற்றுமதி மேம்பாட்டு மூலதனப் பொருட்கள் (EPCG) திட்டம் மற்றும் தோற்றச் சான்றிதழ்கள் (CoO) ஆகியவற்றைக் கண்காணிக்கிறது.
  • சிறப்பு இரசாயனங்கள், உயிரினங்கள், பொருட்கள், உபகரணங்கள் மற்றும் தொழில் நுட்பங்களுக்கான (SCOMET) உரிமங்கள், ஏற்றுமதிக் கடமைகள், ஒழுங்குமுறை இணக்கம் மற்றும் தயாரிப்புகள் மற்றும் சந்தைகள் முழுவதும் வர்த்தக செயல்திறன் ஆகியவற்றை இது கண்காணிக்கிறது.
  • இது வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரக (DGFT) இணையதளம் மற்றும் வர்த்தக இணைப்பு மின்-தளம் (Trade Connect ePlatform) ஆகியவற்றிலிருந்து தரவை ஒருங்கிணைத்து, வர்த்தகத் தடைகள், வளர்ந்து வரும் ஏற்றுமதி சந்தைகள் மற்றும் பயன்படுத்தப்படாத தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை (FTAs) அடையாளம் காண உதவுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்