TNPSC Thervupettagam

பாங்கோலின் மீதான வர்த்தகத் தடை

February 19 , 2026 4 days 73 0
  • நாகாலாந்தில் உள்ள சாங்டம் பழங்குடி அமைப்பு பாங்கோலின்களைப் பாதுகாக்கவும் சட்டவிரோத வேட்டை மற்றும் வர்த்தகத்தை நிறுத்தவும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
  • இந்த முயற்சியானது இந்தியா-மியான்மர் எல்லைக்கு அருகிலுள்ள கிஃபைர் மற்றும் டுயன்சாங் மாவட்டங்களை உள்ளடக்கியது (சுமார் 1,643 கிமீ) என்பதோடு இது அறியப் பட்ட வனவிலங்கு கடத்தல் பாதையாகும்.
  • உலகில் அதிகம் கடத்தப்படும் பாலூட்டிகளில் பாங்கோலின்களும் அடங்கும் என்ற நிலையில் அவை அவற்றின் செதில்கள் மற்றும் இறைச்சிக்காக என வேட்டையாடப் படுகின்றன.
  • இந்திய எறும்புண்ணி (மானிஸ் க்ராசிகாடேட்டா) மற்றும் சீன எறும்புண்ணி (மானிஸ் பெண்டாக்டைலா) ஆகியவை வடகிழக்கு இந்தியாவில் காணப்படுகின்றன.
  • இந்திய எறும்புண்ணிகள் அருகிவரும் உயிரினங்களாக பட்டியலிடப்பட்டுள்ளன, அதே நேரத்தில் சீன நாட்டின் எறும்புண்ணிகள் IUCN சிவப்பு பட்டியலில் மிகவும் அருகி வரும் உயிரினங்களாக பட்டியலிடப்பட்டுள்ளன.
  • எட்டு பாங்கோலின் இனங்களும் சர்வதேச வணிக வர்த்தகத்தைத் தடைசெய்யும் CITES இணைப்பு I இன் கீழ் பட்டியலிடப் பட்டுள்ளன.
  • இந்த முயற்சியானது, இந்திய வனவிலங்கு அறக்கட்டளை (WTI) தலைமையிலான பாங்கோலின் பாதுகாப்பு நிதியத்தின் ஆதரவுடன், பாங்கோலின் கடத்தல் தடுப்புத் திட்டத்தை ஆதரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்