TNPSC Thervupettagam

பாடிதெல்புசா - புதிய நன்னீர் வாழ் நண்டு இனம்

November 4 , 2025 23 days 75 0
  • அறிவியலாளர்கள், சேலம் மாவட்டத்தின் ஏற்காட்டில் உள்ள சேர்வராயன் மலைகளில் நன்னீர் வாழ் நண்டுகளின் ஒரு புதிய பேரினத்தையும், புதிய இனங்களையும் அடையாளம் கண்டுள்ளனர்.
  • புதிதாக விவரிக்கப்பட்ட பேரினம் பாடிதெல்புசா மற்றும் அதன் இனம் பாடிதெல்புசா ஏற்காடென்சிஸ் என்பதாகும்.
  • நன்னீர் வாழ் நண்டுகள் பற்றிய ஆய்வில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றிய பிரபல இந்திய வகைப் பிரிப்பாளரான சமீர் குமார் பாடியின் நினைவாக இந்த இனத்திற்கு இப்பெயரிடப் பட்டுள்ளது.
  • இது தென்னிந்தியாவில் காணப்படும் ஓர் இனமான டிராவன்கோரியானா ஷிர்னெரே என்ற இனத்திலிருந்து 9.66% மரபணு வேறுபாட்டைக் கொண்டுள்ளது.
  • இந்த நண்டினத்தின் பரிணாம வளர்ச்சியானது, அருகிலுள்ள மலைத் தொடர்ச்சிகளில் இருந்து ஆழமான பள்ளத்தாக்குகள் மற்றும் காவிரி நதி அமைப்பால் பிரிக்கப்பட்ட சேர்வராயன் மலைகளின் நிலப்பரப்பு தனிமைப்படுத்தலால் வடிவமைக்கப் பட்டு இருக்கலாம்.
  • இந்த இயற்கைத் தடைகள் ஆனது மரபணு ஓட்டத்தைக் கட்டுப்படுத்தி, இந்த நண்டுகளின் எண்ணிக்கை காலப்போக்கில் சுயாதீனமாக உருவாக வழி வகுத்தது.
  • இந்த கண்டுபிடிப்புடன், இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நன்னீர் வாழ் நண்டு இனங்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது, இது கெகார்சினுசிடே குடும்பத்தின் கீழ் உள்ள 31 வகைகளைச் சேர்ந்தவையாகும்.
  • உலகில் அறியப்பட்ட நன்னீர் வாழ் நண்டு இனங்களில் சுமார் 10% இந்தியாவில் காணப் படுகின்றது என்ற நிலையில் அவற்றில் பல சிறிய, உள்ளூர்மயமாக்கப்பட்ட வாழ்விடங்களில் மட்டுமே காணப்படுகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்