பாதுகாப்புப் பொருள்களை கொள்முதல் செய்யும் நடைமுறைக்கான குழு
August 20 , 2019 2095 days 663 0
“இந்தியாவில் தயாரிப்போம்” என்ற திட்டத்தை வலுப்படுத்துவற்காக பாதுகாப்புப் பொருள்களை கொள்முதல் செய்யும் நடைமுறைக்கான (Defence Procurement Procedure - DPP) ஆய்வுக் குழு ஒன்றை அமைக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
11 உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குழுவானது கையகப்படுத்துதல் துறைக்கான பொது இயக்குநரின் தலைமையில் அமைக்கப்படுகின்றது.
இது பாதுகாப்புப் பொருட்களை வாங்குதல், இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவித்தல், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளைக் களையச் செய்தல் ஆகியவற்றிற்கு முயற்சி செய்யும்.