ரோஸ்கர் சமாச்சாரின் மின்னணு பதிப்பானது மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சரான பிரகாஷ் ஜவடேகரால் சமீபத்தில் தொடங்கப்பட்டது.
இது பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அரசுத் துறைகளில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து ஆர்வலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் 1976 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இது எம்ப்ளாய்மென்ட் நியூஸ் (ஆங்கிலம்) பத்திரிக்கையின் தொடர்புடைய பதிப்பாகும்.
எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழானது தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் வாராந்திர வேலைவாய்ப்பு இதழாகும்.