TNPSC Thervupettagam

தார் விரைவு ரயில் சேவை ரத்து

August 19 , 2019 2092 days 733 0
  • இந்தியாவானது பாகிஸ்தானுக்குச் செல்லும் தார் இணைப்பு விரைவு ரயில் சேவையை நிறுத்தியுள்ளது.
  • ராஜஸ்தானின் ஜோத்பூரிலிருந்து புறப்படும் இந்த ரயிலானது இந்திய எல்லையின் கடைசி நிறுத்தமான முனாபாவோவைக் கடந்து பாகிஸ்தானின் கராச்சியைச் சென்றடையும்.
  • இந்த தார் விரைவு ரயிலானது, முன்னாள் சிந்து மெயிலின் தொடர்ச்சியாகும்.
  • இது 41 வருடங்களுக்குப் பின்னர் 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 அன்று மீண்டும் தனது பயணத்தைத் தொடங்கியது.

இதர விவரங்கள்

  • 1976 ஆம் ஆண்டு ஜுன் 28 அன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகியவை ரயில் தொடர்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன.
  • இது 1971 ஆம் ஆண்டில் ஏற்பட்ட இந்திய-பாகிஸ்தான் போருக்குப் பின்னர் சில மாதங்கள் கழித்து இருதரப்பு உறவை சுமூகமாக்குவதற்கான சிம்லா ஒப்பந்தத்தை அடுத்து (ஜூலை 02, 1972) கையொப்பமிடப்பட்ட து.
  • இந்த ஒப்பந்தமானது தார் இணைப்பு விரைவு ரயில் மற்றும் சம்ஜவுதா விரைவு இரயில் ஆகியவற்றிற்கான அடிப்படையாக அமைந்தது.
  • டெல்லி – லாகூர் மற்றும் ஸ்ரீநகர் - முஸாபர்ஃபாத் ஆகியவற்றிற்கான பேருந்து சேவைகள் மற்றொரு ஒப்பந்தத்தின் அடிப்படையிலானதாகும்.


Post Views:
733

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்