கடலுக்கடியில் கண்ணாடி இழை கம்பி வட வலையமைப்பு மூலம் எட்டு அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை இணைக்கும் ‘பானி’ (PANI) திட்டத்தை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
முன்மொழியப்பட்ட இந்த கம்பி வட வலையமைப்பு ஒடிசாவின் பூரியில் இருந்து தொடங்கும்; இது தற்போதைய சென்னை – அந்தமான் கம்பி வட வழித்தடத்திற்கு மாற்றாக அமையும்.
திகிலிபூர், மாயாபந்தர், ஷாஹீத் தீவு, சௌரா, தெரசா, கட்சல், நான்கோவ்ரி மற்றும் லிட்டில் நிக்கோபார் ஆகியவை அந்த எட்டு தீவுகளாகும்.
இணைய இணைப்பை மேம்படுத்துவதையும், அவசர காலங்கள் மற்றும் இடையூறுகளின் போது நம்பகமான தகவல் தொடர்பை உறுதி செய்வதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
திருத்தப்பட்ட பாரத்நெட் திட்டம், இணைப்பு இல்லாத 174 கிராமங்களுக்கு வீடுகளுக்கே நேரடி கண்ணாடி இழை (FTTH) இணைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.