பாம்பாடும் சோலை தேசியப் பூங்காவில் புல்வெளிகளின் மீளுருவாக்கம்
November 9 , 2025 19 days 61 0
கேரளாவில் உள்ள பாம்பாடும் சோலை தேசியப் பூங்காவானது, அயல் ஊடுருவல் இனமான ஆஸ்திரேலிய வாட்டில் மரங்களை அகற்றுவதன் மூலம் அதன் பூர்வீகப் புல்வெளிகளை மீட்டெடுக்கிறது.
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் 1,900 முதல் 2,300 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்தப் பூங்கா, 1,300 ஹெக்டேர்களுக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்டுள்ளது.
கேரளாவின் 2021 ஆம் ஆண்டு கால சுற்றுச்சூழல் மீளுருவாக்கக் கொள்கை, 600 ஹெக்டேர் பரப்பிலான பகுதிகளை மீட்டெடுக்கும் திட்டங்களுடன் அயல் ஊடுருவல் இனங்களை அகற்றுவதற்கு முன்னுரிமை அளிக்கிறது.
மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பிற பகுதிகளிலும் அதற்கு அப்பாற்பட்டப் பகுதிகளிலும் வெப்பமண்டல மலைப்பகுதி சுற்றுச்சூழல் மீளுருவாக்கத்திற்கான ஒரு மாதிரியாக இந்தத் திட்டம் ஆய்வு செய்யப் பட்டு வருகிறது.