தமிழ்நாட்டில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில், வருடாந்திரப் பறவைகள் கூடு கட்டும் பருவத்தில் 20க்கும் மேற்பட்ட வலசை போகும் பறவை இனங்களின் வருகையானது பதிவாகியுள்ளது.
சென்னையிலிருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்தச் சரணாலயம், தற்போது 15,000க்கும் மேற்பட்ட பறவைகளைக் கொண்டுள்ளது.
நத்தைக் குத்தி நாரைகள், வெள்ளை அரிவாள் மூக்கன், சாம்பல் நிற நாரை, கொக்குகள் மற்றும் கூழைக் கடா போன்ற பறவை இனங்கள் இங்கு காணப்பட்டு உள்ளன.