TNPSC Thervupettagam

பாராசிங்கா வனவிலங்கு சரணாலயம் - சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம்

April 26 , 2026 7 days 87 0
  • சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் உத்தரப் பிரதேசத்தில் உள்ள பாராசிங்கா வனவிலங்கு சரணாலயத்தைச் சுற்றி சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தை (ESZ) அறிவிப்பதற்கான வரைவு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.
  • முன்மொழியப்பட்ட இந்த சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம், செயல்பாடுகளை முறைப்படுத்தவும் சுற்றியுள்ள சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் சுமார் 307 கிராமங்கள் உட்பட 408.7 சதுர கி.மீ பரப்பளவை உள்ளடக்கும்.
  • சூழல் உணர்திறன் மண்டலங்கள் (ESZs) என்பவை தேசியப் பூங்காக்கள் மற்றும் வன விலங்கு சரணாலயங்களைச் சுற்றியுள்ள இடைநிலை மண்டலங்களாகும், இவை வளர்ச்சி, தொழிற்சாலை நடவடிக்கைகள் மற்றும் நிலப் பயன்பாட்டு மாற்றங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் "அபாய தணிப்பான்களாக" செயல் படுகின்றன.
  • இது மேற்கு உத்தரப் பிரதேசத்தில் ஒரு முக்கியமான வாழ்விடமாக உள்ள இந்தச் சரணாலயம் முசாபர்நகர், மீரட், ஹாபூர், பிஜ்னோர் மற்றும் அம்ரோஹா ஆகிய ஐந்து மாவட்டங்களில் பரவியுள்ளது.
  • மனித நடவடிக்கைகளைக் குறைத்தல், பல்லுயிர்களைப் பாதுகாத்தல் மற்றும் இந்தப் பகுதியின் முக்கிய உயிரினமான பாராசிங்காவை (சதுப்பு நில மான்) பாதுகாக்கும் அதே வேளையில் நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதை இந்த அறிவிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்