TNPSC Thervupettagam

பாரிசு உடன்படிக்கையின் கீழ் கார்பன் சந்தைகள்

August 30 , 2025 7 days 29 0
  • சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் ஆனது, பாரிசு உடன்படிக்கையின் 6வது பிரிவினைச் செயல்படுத்துவதற்கு தேசிய அளவில் நிர்ணயிக்கப் பட்ட ஆணையத்தினை (NDA) இறுதி செய்துள்ளது.
  • 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி அறிவிக்கப்பட்டபடி, NDA என்பது சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செயலாளர் தலைமையிலான 21 உறுப்பினர்களைக் கொண்ட குழுவாகும்.
  • இதன் உறுப்பினர்களில் வெளியுறவு அமைச்சகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, எஃகு அமைச்சகம், நிதி ஆயோக் ஆகியவற்றின் அதிகாரிகள் அடங்குவர் என்பதோடு மேலும் இதில் சுற்றுச்சூழல் அமைச்சகம் அதிகபட்ச பிரதிநிதித்துவம் கொண்டுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டில் பாகுவில் நடைபெற்ற COP29 மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 6வது பிரிவு, பாரிசு உடன்படிக்கையின் கீழ் உலகளாவிய கார்பன் சந்தைகளுக்கான விதிகளை வரையறுக்கிறது.
  • உமிழ்வு குறைப்புத் திட்டங்களை அங்கீகரிப்பது, கார்பன் வர்த்தகத்திற்கான தகுதியான நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பது மற்றும் தேசியப் பருவநிலை இலக்குகளை நோக்கி உமிழ்வு அலகுகளைப் பயன்படுத்துவதை அங்கீகரிப்பது ஆகியவற்றுக்கானப் பொறுப்பினை NDA கொண்டுள்ளது.
  • ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையின் கீழ் உருவாக்கப்படும் கார்பன் வரவுகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்வதே கார்பன் சந்தை நெறிமுறையின் நோக்கமாகும்.
  • இந்தியாவின் தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகள் (NDC) ஆனது 2030 ஆம் ஆண்டிற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உமிழ்வு தீவிரத்தை 2005 ஆம் ஆண்டின் நிலைகளிலிருந்து 45 சதவீதம் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • புதைபடிவம் சாரா எரிபொருட்களிலிருந்து 50 சதவீத மின் உற்பத்தித் திறனையும், 2030 ஆம் ஆண்டிற்குள் காடு வளர்ப்பு மூலம் 2.5 முதல் 3 பில்லியன் டன் அளவிலான கார்பன் உறிஞ்சு பகுதியை உருவாக்குவதையும் இந்தியா இலக்காகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்