TNPSC Thervupettagam

பாஸ் மோசடி - செபி

July 25 , 2026 2 days 42 0
  • அதிகரித்து வரும் "பாஸ் மோசடி" (Boss Scam) அல்லது தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஆள்மாறாட்ட மோசடி குறித்து இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) ஆனது நிறுவனங்களை எச்சரித்துள்ளது.
  • மோசடி செய்பவர்கள், நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்ய, போலி வாட்ஸ்அப் கணக்குகள், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப் பட்ட குரல் நகலாக்கம், டீப்ஃபேக் வீடியோ அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்களைப் பயன்படுத்துகின்றனர்.
  • அவசர நிதிப் பரிமாற்றங்களைச் செய்ய அல்லது மால்வேரை நிறுவி வாட்ஸ்அப் இணைய (WhatsApp Web) கணக்குகளை சமரசம் செய்யும் தீங்கிழைக்கும் .zip வகை கோப்புகளைத் திறக்க ஊழியர்கள் வற்புறுத்தப்படுகிறார்கள்.
  • இந்திய இணையவழி குற்றப்பிரிவு ஒருங்கிணைப்பு மையம் (I4C) இது போன்ற இணைய வழி மோசடி வழக்குகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்ததையடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  • பணம் செலுத்துவதற்கான கோரிக்கைகளை மூத்த அதிகாரிகளிடம் நேரடியாகச் சரி பார்க்கவும், சந்தேகத்திற்குரிய கோப்புகளைத் திறப்பதைத் தவிர்க்கவும் அல்லது செய்தியிடல் தளங்களை மட்டுமே நம்பியிருப்பதைத் தவிர்க்கவும் செபி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்