TNPSC Thervupettagam

பி.என். பணிக்கர் புத்தக வெளியீடு

May 27 , 2026 2 days 59 0
  • குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் உபராஷ்டிரபதி பவனில் “The Library Man of India: The Story of P.N. Panicker” என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
  • இந்தப் புத்தகம் பி.என். பணிக்கரின் வாழ்க்கை மற்றும் அவரது பங்களிப்புகளை விவரிக்கிறது.
  • பி.என். பணிக்கர் கேரளாவின் நூலகம் மற்றும் எழுத்தறிவு இயக்கத்தின் தந்தை என்று அழைக்கப் படுகிறார்; மேலும் மாநிலத்தில் வாசிக்கும் பழக்கத்தைப் பரப்புவதில் முக்கியப் பங்கு வகித்தார்.
  • அவர் 1945 ஆம் ஆண்டில் சனாதன தர்ம நூலகத்தை நிறுவினார், பின்னர் கிராமப்புற நூலகங்களை விரிவுபடுத்துவதற்காக கேரள கிரந்தசாலா சங்கத்தை நிறுவ உதவி உள்ளார்.
  • "வாசித்து வளர்" என்ற அவரது முழக்கம் கேரளா முழுவதும் உள்ள கிராமங்கள் மற்றும் பழங்குடியினப் பகுதிகளில் வாசிப்பு மற்றும் கல்வியை ஊக்குவித்தது.
  • ஜூன் 19 அன்று கொண்டாடப்படும் அவரது பிறந்த நாள் இந்தியாவில் தேசிய வாசிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்