TNPSC Thervupettagam
July 8 , 2026 7 hrs 0 min 12 0
  • இன்ஸ்ப்ரூக் பல்கலைக்கழக அறிவியலாளர்கள் 'பின்ன ஃபெர்மி கடல்' எனப்படும் புதிய ஈர்க்கக் கூடிய குவாண்டம் பருப்பொருள் நிலையை உருவாக்கியுள்ளனர்.
  • இச்சோதனையில் சில நானோகெல்வின் அளவிற்கு குளிரூட்டப்பட்ட சுமார் 70,000 சீசியம் அணுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் துகள்களின் இயக்கத்தைக் கட்டுப் படுத்த அவை ஒரு பரிமாணக் குழாய்களில் அடைக்கப்பட்டன.
  • பின்ன ஃபெர்மி கடல் என்பது மிகக் குறைந்த வெப்பநிலையில் உருவாகும் ஒரு குவாண்டம் நிலையாகும், அங்கு துகள்கள் அசாதாரண கூட்டு நடத்தை முறையை வெளிப்படுத்துகின்றன.
  • இக்கண்டுபிடிப்பானது, ஒரு பரிமாணத்தில் துகள்களின் ஊடாடல்களை விவரிக்கும் தோமோநாகா-லுட்டிங்கர் திரவக் கோட்பாட்டிற்கு அப்பாற்பட்ட குவாண்டம் நடத்தையை ஆராய்கிறது.
  • இச்சோதனையில் பயன்படுத்தப்படும் சீசியம் (Cs) என்பது அணு எண் 55 ஐக் கொண்ட ஒரு கார உலோகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்