இந்தியாவில் 500க்கும் குறைவான எண்ணிக்கையில் காணப்படும் பின்ஸ் வீவர் என்ற பறவையானது அசாமின் சிலப் பகுதிகளோடு சேர்த்து உத்தரகாண்ட் மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள தராய் புல்வெளிகளிலும் பெருமளவில் காணப் படுகின்றன.
தற்போது வரையில் சர்வதேச இயற்கை வளங்காப்பு ஒன்றியத்தின் சிவப்புப் பட்டியலில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய இனமாக குறிப்பிடப்பட்ட பின்ஸ் வீவர் பறவையானது (Ploceus megarhynchus) தற்போது அருகி வரும் (endangered) இனமாக குறிப்பிடப் பட்டுள்ளது.